பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதியை 'தேசிய மாணவர் தினமாக' அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
கல்வித்துறையில் மாபெரும் புரட்சியையும், சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியை 'தேசிய மாணவர் தினமாக' அறிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்திக்கும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் அத்வானிக்கும் கடித நகல்கள் அனுப்பப்பட்டுள்ளது. |