கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல்நகர் அருகே கஞ்சா கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதில் இருந்த 130 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் ஆகும்.
கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வேன் ஒன்றை வழிமறித்தனர்.
அப்போது வேன் நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து வேனை காவல்துறையினர் விரட்டி சென்று பிடித்தனர். இரவு நேரம் என்பதால் வேனில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து வேனை சோதனை செய்த காவல்துறையினர், அதில் இருந்த 66 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி வேனையும் பறிமுதல் செய்தனர். |