முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > தண்டவாளத்தில் விரிசல்: முத்துநகர் ‌விரைவு இர‌யி‌ல் த‌ப்‌பியது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தண்டவாளத்தில் விரிசல்: முத்துநகர் ‌விரைவு இர‌யி‌ல் த‌ப்‌பியது
விருதுநக‌ர் அருகே த‌ண்டவாள‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌‌‌வி‌ரிச‌லை இர‌யி‌ல்வே ஊ‌ழிய‌ர்க‌ள் த‌க்க நேர‌த்‌தி‌ல் க‌ண்டு‌பிடி‌த்ததா‌ல் மு‌த்துநக‌ர் ‌விரைவு இர‌யி‌ல் ‌விப‌த்த‌ி‌ல் இரு‌ந்து த‌ப்‌பியது.

விருதுநகரை அடுத்த அல்லம்பட்டியில் ரயில் தண்டவாளத்தில் இன்று விரிசல் ஏற்பட்டு இருந்ததை ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் பார்த்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்த முத்துநகர் ‌‌விரைவு இரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் முத்துநகர் ‌விரைவு இரயில் விபத்தில் இருந்து தப்பியது.

இதை‌த் தொட‌ர்‌ந்து தண்டவாள விரிசல் ‌ச‌ரிசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இதையடு‌த்து சுமா‌ர் 45 ‌நி‌மிட‌ம் தாமத‌த்‌தி‌ற்கு பின்னர் முத்துநகர் ‌விரைவு இர‌யி‌ல் புறப்பட்டு சென்றது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எழும்பூர்-நாகர்கோவில் வாரந்திர சிறப்பு இரயில்கள் நீடிப்பு
கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர்க‌ள் 9 பே‌ர் இடமாற்றம்
போராட்டம் ஏன்? பயிற்சி மருத்துவர்கள் விளக்கம்
து‌ப்பா‌க்‌கி ‌பிர‌ச்சனை : அமெ‌ரி‌க்க ‌பிரமுகரு‌க்கு ‌நிப‌ந்தனை ‌பிணை
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாததற்கு ஜெயல‌லிதா வரவேற்பு
கூடுதல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் 4 பேரு‌க்கு பதவி உயர்வு