முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > எழும்பூர்-நாகர்கோவில் வாரந்திர சிறப்பு இரயில்கள் நீடிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எழும்பூர்-நாகர்கோவில் வாரந்திர சிறப்பு இரயில்கள் நீடிப்பு
எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வரும் வாரந்திர சிறப்பு ரயில்கள் மேலும் 3 மாதத்திற்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொட‌ர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ூலை வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களை மேலும் 3 மாதத்திற்கு நீடித்து தெற்கு ரயில்வே உத்தரவிடுகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமை தோறும் இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் (0637) ஆகஸ்‌ட் 6ஆ‌ம் தேதியில் இருந்து அக்டோபர் 29ஆ‌ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(0638) ஆகஸ்‌ட் 7 முதல் அக்டோபர் 30ஆ‌ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமை 6.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0639) ஆகஸ்‌ட் 3ஆ‌ம் தே‌தி முதல் அக்டோபர் 26 ஆ‌ம் தே‌தி வரை நீடிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0640) ஆகஸ்‌ட் 4‌ஆ‌‌ம் தே‌தி முதல் அக்டோபர் 27 ஆ‌ம் தே‌‌தி வரை நீடிக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சனிக்கிழமை அன்று இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (0609) ஆகஸ்‌ட் 8 ஆ‌ம் தே‌தி முதல் அக்டோபர் 31ஆ‌ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிறு அன்று மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(0610) ஆகஸ்‌ட் 9ஆ‌ம் தேதி முதல் நவம்பர் 1ஆ‌ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு திங்கட்கிழமை அன்று மாலை 7.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0652) ஆகஸ்‌ட் 3ஆ‌ம் தேதி முதல் அக்டோபர் 26‌ஆ‌ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0651) ஆகஸ்‌ட் 4ஆ‌ம் தே‌தி முதல் அக்டோபர் 27ஆ‌ம் தே‌தி வரை நீடிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0661) ஆகஸ்‌ட் 2 ஆ‌ம் தே‌தி முதல் அக்டோபர் 25ஆ‌ம் தே‌தி வரை நீடிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் (0662) ஆகஸ்‌ட் 3 முதல் அக்டோபர் 26 வரை நீடிக்கப்படுகிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர்க‌ள் 9 பே‌ர் இடமாற்றம்
போராட்டம் ஏன்? பயிற்சி மருத்துவர்கள் விளக்கம்
து‌ப்பா‌க்‌கி ‌பிர‌ச்சனை : அமெ‌ரி‌க்க ‌பிரமுகரு‌க்கு ‌நிப‌ந்தனை ‌பிணை
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாததற்கு ஜெயல‌லிதா வரவேற்பு
கூடுதல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் 4 பேரு‌க்கு பதவி உயர்வு
மதுரை ரூ.320 கோடியில் ஆராய்ச்சி மையங்கள்