முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து நேற்று மதியம் முதல் திடீரென அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பவானிசாகர் அணை. தென் இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த ஆண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை சரியான நேரத்திற்கு பெய்யாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது.

அதே சமயம் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கண்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசப்பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் நாளொறு மேனி பொழுதொறு வண்ணமாக குறைந்து கொண்டே வந்தது. எப்படியும் பருவமழை சரியான நேரத்திற்கு பெய்து பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பருவமழை சரியாக பெய்யமால் பொய்தது. இதன் எதிரொலியாக பவானிசாகர் அணைக்கு சொற்ப தண்ணீரே வந்தது.

கடந்த வாரம் அணைக்கு வினாடிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்தது. அதே சமயம் அணையில் இருந்து பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 1250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மள, மளவென குறைந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து குடி தண்ணீருக்கு பிரச்சனை வந்துவிடுமோ என பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை எட்டு மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 467 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. முன்பை காட்டிலும் இலேசாக தண்ணீர் வரத்து உயர தொடங்கியது. நேற்று மதியம் 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 2723 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் கீழ்நோக்கி சென்றுகொண்டிருந்த அணையின் நீர்மட்டம் மேலே வர தொடங்கியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 42.70 ஆகும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மல்லிகை உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்தது
ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு தந்தை மீது மகள் வழக்கு
ஊ‌க்க‌த் தொகை உய‌ர்வு கோ‌ரி ப‌யி‌ற்‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் வழ‌க்கு
இராணுவ வாகன தாக்குதல் வழக்கு‌: பிணை‌யி‌ல் வந்தவர்கள் காப்பகத்தில் சேவை
டீசல் விலை உயர்வு எதிரொலி: சரக்கு லாரி வாடகை 25% உயர்த்த முடிவு
பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய தா.பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்