ஊக்கத் தொகை உயர்வு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி. முருகேசன், கே. வெங்கட்ராமன் ஆகியோர் கொண்ட அமர்வு, "வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கினால், ஊக்கத் தொகை உயர்வு கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சங்கப் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து விட்டு, இன்று தங்களது முடிவைக் கூறுவதாகப் பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். |