முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய தா.பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய தா.பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலர் தா.பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற உடன் 100 நாட்களில் துறைவாரியாக பல சாதனை செய்ய போவதாக அறிவித்தது. ஒரு மாதம் கடந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் எல்லா பொருட்களின் விலையும் உயரும் என்பது வேதனை தருகிறது.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ள நிலையில் விலையேற்றம் தேவையற்றது. இந்நிலையில் விலை உயர்ந்ததற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' எ‌ன்று தா.பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
முதல்முறையாக திருச்சியில் ஆசிரியர் பயிற்சி படிப்பு கல‌ந்தா‌ய்வு தொடங்கியது
'டெபாசிட்டை திரும்ப வழங்காத வங்கியின் சொத்தை ஏலம் விடுவது சரிதான்'
ஆசிரியர் நியமன‌த்த‌ி‌ல் அருந்ததியருக்கு ஒதுக்கீடு கோரி வழக்கு
விடைத்தாளை கவனக்குறைவாக திருத்திய ஆசிரியர்கள் இடை‌நீ‌க்க‌ம்: பள்ளிக்கல்வி இயக்குனர்
மதுரையில் கூஜா குண்டு பதுக்கிய காவல‌ர் உ‌ள்பட 7 பேர் கைது