முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அ.இ.அ.ி.ு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனடியாக ‌திரு‌‌ம்ப பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்க‌ை‌யி‌ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பிலிருந்த 5 ஆண்டு காலத்தில் சர்வதேச விலை உயர்வை காரணம் காட்டி, 13 முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியது.

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சாதாரண மக்களால் வாங்க இயலாத நிலைக்கு உயர்ந்து விட்டன. பின்னர் 2008ம் ஆண்டு இறுதியில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. அமெரிக்கா மிகவும் பாதிப்படைந்தது.

அதன் தாக்கம் இந்தியாவை பிடித்துக் கொண்டது. வியாபாரம் படுத்து விட்டது. பங்கு சந்தை நொடிந்து போய்விட்டது. ஏற்றுமதி நின்று விட்டது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இறங்கவில்லை.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனங்களின் கட்டணம் உயரும். சாலை வழியாக கொண்டு செல்லப்படும் அத்தனை பொருட்களின் விலைகளும் உயரும். இந்த கூடுதல் சுமை சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

இது வாக்களித்த மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஏற்கனவே, பல்வேறு சோதனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க ஏதுவாக இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
முதல்முறையாக திருச்சியில் ஆசிரியர் பயிற்சி படிப்பு கல‌ந்தா‌ய்வு தொடங்கியது
'டெபாசிட்டை திரும்ப வழங்காத வங்கியின் சொத்தை ஏலம் விடுவது சரிதான்'
ஆசிரியர் நியமன‌த்த‌ி‌ல் அருந்ததியருக்கு ஒதுக்கீடு கோரி வழக்கு
விடைத்தாளை கவனக்குறைவாக திருத்திய ஆசிரியர்கள் இடை‌நீ‌க்க‌ம்: பள்ளிக்கல்வி இயக்குனர்
மதுரையில் கூஜா குண்டு பதுக்கிய காவல‌ர் உ‌ள்பட 7 பேர் கைது
ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் கருணாநிதி : நெடுமாறன்