டெபாசிட்டை திரும்ப வழங்காத வங்கியின் சொத்தை ஏலம் விடுவது சரிதான் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த உன்னிசங்கர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் திருமால், நாகர்கோவிலில் எஸ்.யு.எஸ் பேங்கர்ஸ் என்ற பெயரில் வங்கி நடத்தினார். நிதி நெருக்கடி காரணமாக, டெபாசிட்தாரர்களுக்கு திருப்பி பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. லலிதாம்பிகா என்பவர், டெபாசிட் பணத்தை கேட்டு நாகர்கோவில் துணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், நிறுவனத்திற்கு சொந்தமான சொத்தை ஏலம் விட்டு, டெபாசிட்தாரர்களுக்கு பணம் கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி நடந்த ஏலத்தில் முருகன் என்பவர் ரூ.40 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். ஆனால், சொத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம். எனவே, ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி பி.முருகேசன் அளித்த தீர்ப்பில், மனுதாரர் சரோஜா, உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை பெறும்போது, வங்கி சொத்தை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அந்த நிபந்தனைகளை சரோஜா நிறைவேற்றவில்லை. துணை நீதிமன்றம் அனுமதியுடன் மனுதாரர் நிதி நிறுவனத்தின் சொத்தை ஏலம் விட்டது செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். |