ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தங்கமாரியப்பன், செவ்வலூர் முத்தையா, இடையன்குளம் கோவிந்தம்மாள் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க ஏப்ரல் 29ல் அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அந்த அரசாணையை பின்பற்றி எங்களுக்கு இடைநிலை ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், மனு மீது விசாரணை முடியும் வரை 3 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். |