முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் கருணாநிதி : நெடுமாறன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் கருணாநிதி : நெடுமாறன்
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், பின்னோக்கித் தள்ளவும் த‌மிழக முத‌ல்வ‌ர் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

"ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது" என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, "தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்" என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

"கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக"வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கருணா‌நி‌‌தி‌யி‌ன் பே‌ச்சு அ‌தி‌ர்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறது : ராமதா‌ஸ்
இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌க்கு : ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு
மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற மாணவரு‌க்கு பரிசு: தங்கம் தென்னரசு
செ‌ன்னை துறைமுக‌த்து‌க்கு‌ள் வர வணக்காமண் கப்பலு‌க்கு அனுமதி
6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை ர‌த்து செ‌ய்ய ‌கி.‌வீரம‌ணி எ‌தி‌ர்‌ப்பு