முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > திருச்சி அருகே யானைகள் காப்பகம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருச்சி அருகே யானைகள் காப்பகம்
திருச்சி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட உள்ள இப்பூங்காவில் 50 ஏக்கர் நிலத்தை யானைகள் காப்பகத்திற்காக ஒதுக்கித் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயிரியல் பூங்காவின் இயற்கைத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் யானைகள் காப்பகம் அமைக்கப்படும் என திருச்சி வனப் பாதுகாவலர் ராமச்சந்திரபதி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

இயற்கை சூழலும், அபரிமிதமான தண்ணீர் வசதியும் கொண்ட வகையில் அமைக்கப்படும் யானைகள் காப்பகத்தில் ஒரே நேரத்தில் 10 யானைகளை பராமரித்து வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சட்டபேரவையில் அ.தி.மு.க., ம.தி.மு.க. வெளிநடப்பு
மாணவிகள் துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கல்லூரிக்கு வரலாம்: உயர்நீதிமன்றம்
அனைத்து மாநில தலைநகரங்களில் என்.எஸ்.ஜி மையம்: ப.சிதம்பரம் தகவல்
மரக்காணம் அருகே பேருந்துகள் மோதல்: 5 பேர் பலி
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்
வண‌‌ங்காம‌ண் க‌ப்ப‌லி‌ல் வ‌ந்த ‌நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் இல‌ங்கை‌க்கு அனு‌ப்ப‌ப்படு‌கிறது