முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > மரக்காணம் அருகே பேருந்துகள் மோதல்: 5 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மரக்காணம் அருகே பேருந்துகள் மோதல்: 5 பேர் பலி
மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை மரக்காணம் அருகே அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு 35 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் கூனிமேடு பகுதியை இன்று அதிகாலை கடந்தது. அப்போது அவ்வழியாக சாலையைக் கடக்க முதியவர் முயன்றார்.

அவர் மீது மோதாமல் தவிர்க்க ஆம்னி பேருந்து ஓட்டுனர் முயன்ற போது, சென்னையில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற பேருந்து மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் 2 பேருந்துகளும் சாலையோரத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் சாலையைக் கடந்து சென்ற முதியவர் அதே இடத்தில் பலியானார். மேலும் ஆம்னி பேருந்தில் பயணித்த 4 பயணிகள் உயிரிழ்ந்தனர். விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்
வண‌‌ங்காம‌ண் க‌ப்ப‌லி‌ல் வ‌ந்த ‌நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் இல‌ங்கை‌க்கு அனு‌ப்ப‌ப்படு‌கிறது
த‌மிழ‌ர்களை கொ‌ன்ற கொலை‌க்கார கு‌ம்பலை ‌‌ச‌ர்வதேச நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌‌ண்டி‌க்க ம‌த்‌திய அரசை வ‌லியு‌று‌த்த வே‌ண்டு‌ம்: பழ.நெடுமாற‌ன்
கோ‌‌யில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை : அமைச்சர் பெரியகருப்பன்
868 கிராம உதவியாளர்கள் ‌விரை‌வி‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள்: அமைச்சர் பெரியசாமி
புகையிலை பொருட்கள் மீது எலும்புகூடு படம் வெளியிட தாமதம் ஏன்- அன்புமணி