தமிழகத்தில் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து அரசு பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 70 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், வலுக்கட்டாயமாக நன்கொடை வசூலிப்பதை கண்டித்தும் இந்திய மாணவர் சம்மேளனம் (எஸ்.எப்.ஐ.) சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் மாநில செயலர் கனகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். |