முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ம‌த்‌திய அரசு‌க்கு கருணா‌நி‌தி நெரு‌க்குத‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம்: ராமதா‌ஸ்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌த்‌திய அரசு‌க்கு கருணா‌நி‌தி நெரு‌க்குத‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம்: ராமதா‌ஸ்!
இலங்கதீவில் போரமுழக்கங்களகேட்கூடாதஎன்நிலைமையஏற்படுத்துமபடி ‌சி‌றில‌ங்அதிபருக்கு, இ‌ந்‌திய ‌பிரதம‌ர் நிர்ப்பந்தங்கள் கொடு‌க்க முதலமைச்சர் கருணா‌நி‌தி நெருக்குதலகொடுக்வேண்டும்'' பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகள் மீது ‌சி‌றி‌ங்க ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி, அப்பாவி தமிழர்களை தினமும் கொன்று குவித்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக, உயிருக்கு எந்தவித உத்தரவாதமின்றி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சொந்த வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ள இவர்கள் உண்ண உணவின்றியும், மருந்துகள் இன்றியும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரி இட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான இனப்படுகொலையை அதிபர் ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் சபதத்தை துணிந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறார். மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறார். இத்தனை கொடுமைகளுக்கு பிறகும், இந்திய அரசு வாய்திறக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இலங்கை‌‌த் தமிழர்களை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தமிழக அரசும் அந்த கடமையை செய்யவில்லை என்று உலக தமிழர்களெல்லாம் வேதனையில் மூழ்கி நிற்கின்றனர். அவர்களது வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.

இலங்கை‌த் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு தூங்கி கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிடுகிறார். போரை நிறுத்த வேண்டும், அமைதி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது தான்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
1 | 2  >>  
மேலும்
அ‌க்.17இ‌ல் அ.இ.அ.தி.மு.க. 37-வது ஆண்டு துவ‌க்க விழா பொதுக்கூட்டம்!
ஜெயலலிதாவிடம் மரியாதையை எதிர்பார்ப்பது தவறு : கருணாநிதி!
தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. தோ‌ற்றா‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு காரண‌ம்: ஆற்காடு வீராசாமி அ‌ச்ச‌ம்!
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலையை தடு‌‌க்க பிரதமரு‌க்கு த‌ந்‌‌தி அனு‌ப்பு‌ங்க‌ள்: கருணாந‌ி‌தி!
‌மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ‌விருதுநக‌ரி‌ல் அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
அ.இ.அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி : திருநாவுக்கரசர்!