முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி: மார்க்சிஸ்ட் இன்று முக்கிய முடிவு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி: மார்க்சிஸ்ட் இன்று முக்கிய முடிவு!
இர‌ண்டு நா‌ட்க‌ள் நட‌ந்து வரு‌ம் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் செய‌ற்குழு கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்த மு‌க்‌கிய அ‌றி‌வி‌ப்பு இ‌ன்று வெ‌ளியாகு‌ம் எ‌ன்று தெ‌ரி‌‌கிறது.

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌‌ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. இர‌ண்டு நா‌ள் நடைபெறு‌‌ம் இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை தாங்கியு‌ள்ளா‌ர்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநில செயலாளர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர்கள் ஆர்.உமாநாத், உ.ரா.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்மநாபன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு‌ள்ளன‌ர்.

கூ‌ட்ட‌த்‌தி‌ல், தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலைமை, 3-வது அணி அமைப்பது ஆகியவை கு‌றித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. கூ‌ட்ட‌ம் இன்று மாலை முடிவடைகிறது.

கூட்டம் முடிந்ததும், தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
விசைத்தறி தொழிலாளர் பிரச்சினை: விஜயகாந்த் கோ‌ரிக்கை!
சேது சமுத்திர திட்ட வழக்கு: த‌மிழக‌ வழ‌க்க‌றிஞ‌ர் நியமனம்!
அனைத்துவகை ஊனமுற்றோருக்கும் நிவாரண உத‌வி‌த் தொகை: கருணாநிதி உ‌த்தரவு!
கிருஷ்ண ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து!
ஈ‌வ் டீ‌சி‌ங்: நாக‌ர்கோ‌வி‌‌லி‌ல் முதுகலை க‌ல்லூ‌‌ரி மாண‌வி ‌தீ‌க்கு‌ளி‌த்தா‌ர்!
வெடிகு‌ண்டு ‌வீசுவதா‌ல் பே‌ச்சை‌க் குறை‌க்க‌ப் போவதில்லை: டி.ராஜேந்தர்!