முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > குலுக்கல் முறை‌யி‌ல் வீடு கிடைக்காதவர்களுக்கு கட்டணம் வாப‌ஸ்: கருணாநிதி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குலுக்கல் முறை‌யி‌ல் வீடு கிடைக்காதவர்களுக்கு கட்டணம் வாப‌ஸ்: கருணாநிதி!
சென்னை, முகப்பேர் பகுதியிலதமிழ்நாடு வீட்டு வசதி வாரிகுடி‌யிரு‌ப்பு ‌வீடுக‌‌ள் கே‌ட்டு வி‌ண்ண‌ப்‌பி‌த்தவ‌ர்களு‌க்கு குலுக்கல் முறையில் ‌வீடு ‌கிடை‌க்க‌வி‌ல்லையெ‌‌ன்றா‌ல் ப‌தி‌வு‌க்க‌‌ட்டண‌ம் ‌திரு‌ப்‌பிய‌ளி‌க்க‌ முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "சென்னை, முகப்பேர் பகுதியில் மத்திய தர மக்கள் வசிக்கக் கூடிய அளவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 170 குடியிருப்புகளை குலுக்கல் முறையில் விற்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.

இதுவரை 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பதாரர்களிடம் இருந்து மனுவிற்காக ரூ.110‌், அதனை பூர்த்தி செய்து ஒப்படைக்கையில் பதிவுக் கட்டணமாக ரூ.400‌் வீட்டு வசதி வாரியத்தால் பெறப்படுகிறது.

விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் மத்திய தர மக்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த வீடுகளுக்காக விண்ணப்பம் செய்து செப்டம்பர் 30ஆ‌ம் தேதி நடைபெறவுள்ள குலுக்கலில் ‌வீடு கிடைக்காதவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணமான ரூ.400 மீண்டும் அவர்களிடம் திருப்பியளிக்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்" எ‌ன்று கூறப் பட்டுள்ளது.
மேலும்
ஒகேனக்கல்: க‌ர்நாடக முத‌ல்வ‌ர் ‌மீது காங்‌கிர‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ட்டு!
கூட்டணியில் இருந்து விலக கம்யூனிஸ்டுகள் திட்டம்: கருணாநிதி!
ச‌ங்கரராம‌‌ன் கொலை வழ‌க்கு: செ‌ப்.24 விசாரணை!
ஊனமு‌ற்றோரு‌க்கு உத‌வி‌த் தொகை: கருணா‌நி‌தி உ‌த்தரவு!
பொ‌றி‌யி‌ய‌ல் க‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கு ரூ.25,000 உத‌வி‌த்தொகை: கருணா‌நி‌தி உ‌த்தரவு!
மின் தடையால் டீசல் தட்டுப்பாடா?