முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மீனவர்களை மீட்ககோரி பிரதமருக்கு வைகோ கடிதம்!  Search similar articles
சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்களை உடனடியாக ‌மீ‌ட்க கோ‌ரி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங்கு‌க்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அ‌ந்த கடித‌த்த‌ி‌ல் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 9.6.2008 அன்று நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அதில் ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் பிடித்து சென்ற 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தேன்.

அந்த மீனவர்கள் 18 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் 5 பேர் இன்னும் ‌சி‌றில‌ங்கா கடற்படை காவலில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அவர்களில் 14 வயது சிறுவனும் இருக்கிறார்.

அவர்கள் மீது ‌சி‌றில‌ங்கா அரசு கள்ளக்கடத்தல் பொய் வழக்கு போட்டு தண்டனை அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிகிறது. எனவே தாங்கள் தலையிட்டு அப்பாவி மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க நட வடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
த‌னி‌ப்ப‌‌ட்ட முறை‌யி‌ல் பா.ம.க.‌வின‌ர் தா‌‌க்‌கி பேசுவதை ஏ‌ற்க முடியாது: கருணா‌நி‌தி!
இ‌ன்று ‌‌நிறைவடை‌கிறது தி.மு.க. மகளிர் மாநாடு: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது!
இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் நாத்திக பிரசாரத்தை அனுமதிக்க கூடாது: இல.கணேசன்!
பெண்கள் இட ஒதுக்கீடு இ‌னியு‌ம் தாமத‌ம் கூடாது: ஜெயலலிதா!
க‌ட்‌சிக‌ள் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும் ‌: கிருஷ்ணசாமி!
விமர்சனம் செய்தால் பணியாற்ற தூண்டு‌ம்: ராமதாஸ்!