முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
க‌ம்‌பி கு‌த்‌தி பயணிகள் 4 பேர் பலி!
வேலு‌ச்சா‌மி
ஈரோடு அருகே பேருந்துக்குள் கம்பி புகுந்ததால் நான்கு பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு அருகே உள்ளது குண்டடம். இந்த பகுதியில் காற்றாலையின் விசிறி தாங்கும் கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரிக்கு பின்னால் குங்குமபாளையத்தை நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. ஒரு வளைவில் லாரி திரும்பும்போது லாரியில் இருந்த கம்பி சரிந்து பேருந்துக்குள் புகுந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த குங்குமபாளையத்தை சேர்ந்த மோகன் (25), கார்மேகம் (17), சரோஜினி (35), நாற்பது வயது மதிக்கதக்க அடையாளர் தெரியாத வாலிபர் ஆகிய நான்குபேரும் ‌நி‌க‌ழ்‌விடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 21 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ‌விப‌‌‌த்து குறித்து குண்டடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தல் தடுக்க பிறந்தவுடனே கால்ரேகை பதிவு செய்ய முடிவு!
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஈரோ‌ட்டி‌ல் 16 ஆம் தேதி நூ‌ல் உற்பத்தி நிறுத்தி போராட்டம்!
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை‌யி‌ல் யானை கூட்டம் : வாகன ஓ‌ட்டிக‌ள் அச்சம்!
ல‌‌ஞ்ச‌ம் பெ‌ற்ற உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌‌ச்சா‌ற்று: அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா!
த‌னியா‌ர் பொ‌றி‌யி‌ய‌ல் க‌‌‌ல்லூ‌ரிக‌ளி‌ல் கூடுதல் கட்டணம் வாங்கினால் நடவடிக்கை : பொ‌ன்முடி!