முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தல் தடுக்க பிறந்தவுடனே கால்ரேகை பதிவு செய்ய முடிவு!
வேலு‌ச்சா‌மி
ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தி செல்வதை தடுக்க குழந்தை பிறந்தவுடனே அந்த குழந்தையின் கால்ரேகை பதிவு செய்ய முடிவசெய்யப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்துவது சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆணகுழந்தைகளை கடத்தி சென்றுவிடுகின்றனர். கடந்த வாரம் இப்படி கடத்தி சென்ற குழந்தையை மீட்டபிறகும் இரு பெண்கள் அந்த குழந்தை மீது உரிமைகோருவதால் மரபணு சோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உசேன்அலி செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் வார்டில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி இருந்தாலும் ஆண் குழந்தை எப்படியாவது திருடிச்சென்று விடுகின்றனர். திருட்டை தடுக்க இனி பிறக்கும் குழந்தைகளின் கால்ரேகை பாதிவு செய்யப்பட உள்ளது. பிறக்கும் குழந்தைகளில் கை ரேகை சரியாக இருக்காது. கால்ரேகை துல்லியமாக இருக்கும். இதை வைத்து குழந்தைகள் திருட்டுபோனால் கண்டுபிடித்து விடாலம் என்றார்.
மேலும்
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஈரோ‌ட்டி‌ல் 16 ஆம் தேதி நூ‌ல் உற்பத்தி நிறுத்தி போராட்டம்!
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை‌யி‌ல் யானை கூட்டம் : வாகன ஓ‌ட்டிக‌ள் அச்சம்!
ல‌‌ஞ்ச‌ம் பெ‌ற்ற உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌‌ச்சா‌ற்று: அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா!
த‌னியா‌ர் பொ‌றி‌யி‌ய‌ல் க‌‌‌ல்லூ‌ரிக‌ளி‌ல் கூடுதல் கட்டணம் வாங்கினால் நடவடிக்கை : பொ‌ன்முடி!
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகாசனப் பயிற்சி!