முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒரு குழ‌ந்தை‌க்கு 2 பே‌ர் போட்டி!
வேலு‌ச்சா‌மி
ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் காணாமல்போன ஆண் குழந்தையை கண்டுபிடித்தவுடன் இந்த குழந்தை என்னுடையது என இர‌ண்டு பே‌ர் போட்டி போடுகின்றனர். இதனால் மரபணு சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஈரோடு அருகே உள்ள முத்தூரை சேர்ந்தவர் ராமசாமி (28). இவருடைய மனைவி சுந்தரி (25). இவருக்கு கடந்த மாதம் 18‌ஆ‌ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டு நாளில் இந்த குழந்தை காணாமல் போனது யாரோ ஒருவர் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ஈரோடு நகர காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாணிக்கம் திரையரங்கத்திற்கு முன் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த பாப்பா (35) என்ற பெண்ணிடம் இருந்து திருட்டுபோன ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இந்த குழந்தை கிடைத்தவுடன் சுந்தரி மற்றும் இன்னொரு பெண் என் குழந்தை என போட்டி போடுகின்றனர்.

இதனால் சென்னையில் குழந்தைக்கு மரப்பணு சோதனை நடத்தி யாருடைய குழந்தை என முடிவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குழந்தைக்காக போட்டிபோடும் இந்த சம்பவம் இப்பகுதி பெண்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
ரா‌‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி ‌‌‌நினைவு நா‌ள் : கிரு‌ஷ்ணசா‌மி வே‌ண்டுகோ‌ள்!
செ‌ன்னை அருகே ‌‌தீ ‌விப‌த்து: 2 பே‌‌ர் ப‌லி!
நட‌ப்பா‌ண்டி‌ல் 100 ல‌ட்ச‌ம் மெ‌ட்‌ரி‌க் ட‌ன் உணவு உ‌ற்ப‌த்‌தி: ‌மு.க.‌ஸ்டா‌லி‌ன்!
‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌லிட‌‌ம் ‌பிடி‌த்த ராஜே‌ஷ்குமாரு‌க்கு மாத‌ம் ரூ.1000 உத‌வி‌த்தொகை: அமை‌ச்ச‌ர் ம‌திவாண‌ன்!
மே 30‌க்கு ‌பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது: ஆ‌ற்காடு வீராசாமி!
மலேசியா‌வி‌ல் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன்!