முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முல்லைப் பெரியாறு அணை பலமாக உ‌ள்ளது: துரைமுருகன்!
''முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பதை ஆயிரம் மேடைகளில் சத்தியம் செய்து நிரூபிக்கத் தயார்'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் தண்டபாணி, அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் சந்திரகாசி, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம் ஆ‌கியோ‌ர், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட கேரளா வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வருவதாக வெளியிடப்பட்ட செய்திக‌ள் வரு‌கிறதே எ‌ன்று கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து பொது‌ப்ப‌ணி‌த்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகை‌யி‌ல், முல்லைப் பெரியாறு அணையை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். பொதுமக்கள் பலர் வந்து அதைப் பார்க்கிறார்கள். அவர்களுள் ஒருவராக வந்து அணையை பார்க்கலாம்.

கேரளா மாநில அமை‌ச்ச‌ர்க‌ள், கேரளாவுக்காக ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வாதாடும் வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் மட்டுமல்ல அந்த வழக்கை கேட்கும் நீதிபதிகளே வந்து அணையைப் பார்க்கட்டும், பரவாயில்லை.

நம்மிடத்தில் ஒளிவு மறைவு கிடையாது. அந்த அணை பலமாக இருக்கிறது என்பதை ஆயிரம் மேடைகளில் சத்தியம் செய்து நிரூபிக்க தமிழக அரசு தயாராக உள்ளது எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.
மேலும்
த‌மி‌ழ்நாடு ஒ‌ளி‌ர்‌கிறது, த‌மிழ‌‌ர்க‌ள் ஒ‌ளிர‌வி‌‌ல்லை: ராமதாஸ்!
பி.இ. சேர குறைந்தபட்ச மதிப்பெண் குறைப்பு!
சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு புதிய தலைமை நீதிபதி!
தசாவதார‌த்‌தி‌ல் கடவுளை அவ‌மதி‌க்கு‌ம் கா‌ட்‌சி இ‌ல்லை: ஆ‌‌‌ஸ்க‌ர் ர‌வி‌ச்‌ச‌ந்‌திர‌ன்!
இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் 5 பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி: பொ‌ன்முடி!
போ‌லி கையெழு‌‌த்‌தி‌ல் இட‌மா‌ற்ற‌ம்: ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌மீது நடவடிக்கை! த‌ங்க‌ம் தெ‌ன்னரசு