முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உயர் நீதிமன்றத்தில் விரைவில் தமிழ்: துரைமுருகன்!
''சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் தமிழ் வழக்கு மொழியாக வரும்'' என்று சட்ட அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

செ‌ன்னை‌யி‌ல் சட்டக் கல்வி இயக்கக புதிய கட்டடம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்து அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் பேசுகை‌யி‌ல், நீதித்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் போன்ற பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் புதிய நீதிமன்றங்களும், விரைவு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் விரைவில் தமிழ் வழக்கு மொழியாக வரும்.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கான புத்தகங்கள் மிகவும் குறைவாக உள்ளன. மாநில சட்டக் கமிஷன் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் சட்டக் கல்லூரி நூலகத்துக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எ‌ன்று அமைச்சர் துரைமுருகன் கூ‌றினா‌ர்.
மேலும்
தென் மாவட்டங்களில் முதலீடு செய்தால் வரிச்சலுகை: தமிழக அரசு!
3 மா‌நில‌ங்க‌ளி‌ல் தமிழக பேரு‌ந்துகளை இயக்க ஒப்பந்தம்: நேரு!
ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை: வ‌‌ணிக‌ர் மாநா‌ட்டி‌ல் ‌தீ‌ர்மான‌ம்!
தமிழக பள்ளிக‌ளி‌ல் லேப்-டாப் கம்ப்யூட்டரில் பாடபுத்தகங்கள்: மு.க.ஸ்டாலின்!
சென்னையில் 42 டிகிரி கொளுத்தியது! ஆங்காங்கு மழையும் பெய்யும்!
3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 30 ல‌ட்ச‌ம் பேரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு உருவா‌க்க‌ப்படு‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!