முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தென் மாவட்டங்களில் முதலீடு செய்தால் வரிச்சலுகை: தமிழக அரசு!
தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேல் முதலீடு செய்தாலவரிச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையிலதொழில் துறை-தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

ரூ. 250 கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.

ரூ. 50 கோடிக்கு மேல் ரூ. 100 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் மூன்று ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப செலுத்தும் வகையில், 0.1 வ‌ிழு‌க்காடு வட்டி வீதத்தில் கடனாக வழங்கப்படும்.

ரூ. 100 கோடிக்கு மேல் ரூ. 200 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவர்கள் நான்கு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை ஏழு ஆண்டுகளுக்கு பின் திரும்பச் செலுத்தும் வகையிலான கடனாக 0.1 ‌விழு‌க்காடு வட்டி வீதத்தில் வழங்கப்படும்.

ரூ.200 கோடிக்கு மேல் ரூ. 250 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவர்கள் ஐந்து ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் திரும்பச் செலுத்தும் வகையிலான கடனாக 0.1 ‌விழு‌க்காடு வட்டி வீதத்தில் வழங்கப்படும்.

தற்போது, ரூ. 250 கோடியிலிருந்து ரூ. 1,500 கோடி வரையிலான முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள் கடனாக வழங்கப்படுகின்றன. தென் மாவட்டங்களுக்கு சிறப்புச் சலுகையாக அது மானியமாக வழங்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
3 மா‌நில‌ங்க‌ளி‌ல் தமிழக பேரு‌ந்துகளை இயக்க ஒப்பந்தம்: நேரு!
ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை: வ‌‌ணிக‌ர் மாநா‌ட்டி‌ல் ‌தீ‌ர்மான‌ம்!
தமிழக பள்ளிக‌ளி‌ல் லேப்-டாப் கம்ப்யூட்டரில் பாடபுத்தகங்கள்: மு.க.ஸ்டாலின்!
சென்னையில் 42 டிகிரி கொளுத்தியது! ஆங்காங்கு மழையும் பெய்யும்!
3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 30 ல‌ட்ச‌ம் பேரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு உருவா‌க்க‌ப்படு‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!
நூல் விலை உயர்வு : கரூரில் வேலை நிறுத்தம்!