தொழில் துறையைப் பொறுத்து மாத்திரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 37,499 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை தி.மு.கழக ஆட்சி மலர்ந்த பிறகு மாத்திரம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேர். ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தனது பணியாளர்களை அழைத்து வர மட்டும் 80 பேருந்துகள் இயங்குகின்றன என்பதிலிருந்தே வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கைதான் வாழ்க்கை!
ஒவ்வொரு தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதும், அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்கள், அப்படி பணிக்கு எடுக்கப்படுகிறவர்கள் தொழிற்சாலைக்கு அருகிலே வாழுகின்ற தமிழர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதித்துதான் அளிக்கப்படுகின்றன.
அந்தத் தொழிற்சாலைகள் கூறுகின்ற எண்ணிக்கையில் 100 பேர் குறைவாக இருக்கலாம், அல்லது 100 பேர் அதிகமாக இருக்கலாம். தொழிற்சாலை வளர வளர அந்த எண்ணிக்கை கூடலாம். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்வது? நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்த வேண்டுமே தவிர, எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காமல் போய் விடும்.
இது மாத்திரமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் இந்த இரண்டாண்டு காலத்தில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, கட்டிடங்கள் கட்டும் பணியிலும், இயந்திரங்களை நிறுவும் பணியிலும் ஈடுபட்டு தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் நிலையிலே உள்ளார்கள். முழு அளவில் நிறுவனங்களைத் தொடங்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
|