முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நூல் விலையேற்றத்தைக் கண்டித்து கரூரில் வேலை நிறுத்தம்
கரூர் : கரூரில் அதிகரித்து வரும் நூல் விலையேற்றத்தைக் கண்டித்து, கரூர் நெசவு, பின்னலாடைத் தொழி‌ற்சாலை உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

மே 5ஆம் தேதி முதல் 7-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் வெள்ளிக்கிழமை கூடிய, கரூர் நெசவு, பின்னலாடை தொழி‌ற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் குழு இது குறித்து விவாதித்தது. இதில், அதிகரித்து வரும் அபரிமிதமான விலையேற்றத்தைக் கண்டித்து, வரும் மே 5 முதல் 7-ம் தேதி வரை 3 நாள்களுக்குக் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கரூர் மாவட்டத்தில் ஏராளமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கான நூல் தேவையும் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை திடீரென அதிகரித்து வருகிறது.

இதனால், ஏற்றுமதியாளர்கள், துணி உற்பத்தியாளர்கள், நெசவாளர் என அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும்
நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்!
பா.ஜ.க. முழு அடை‌‌ப்பு போரா‌‌ட்ட‌ம் : த‌‌‌மிழக‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு இ‌ல்லை!
பெரம்பலூரில் ரூ.900 கோடியில் டயர் தொழிற்சாலை: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
கருணா‌நி‌தியுட‌ன் வயலா‌ர்ர‌வி ச‌ந்‌தி‌ப்பு!
ஆ‌‌ம்பூ‌ர் அருகே லா‌‌ரி ‌மீது பேரு‌ந்து மோத‌ல்: 4 பே‌ர் ப‌லி!
‌ச‌ங்க‌கி‌ரி அருகே ரெ‌யி‌ல் ‌இ‌ன்‌ஜி‌னி‌ல் தீ: 14 ரெ‌யி‌ல்க‌ள் தாமத‌ம்!