முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்!
கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படுவது கத்திரி வெயில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.

சென்னை உள்பட தமிழக‌த்‌தி‌ன் ப‌ல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்துகிறது.

சென்னையில் கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது.

சென்னை, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் நே‌ற்று வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.08, வேலூ‌‌ர் 106.8, திருச்சி, புது‌ச்சே‌ரி 104, சேல‌ம் 99, கோவை 96.08 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

சென்னையில் இ‌ன்று காலையிலேயே வெயிலின் தாக்கம் அ‌திகமாகவே இரு‌ந்தது. வெ‌ளி‌யி‌ல் செ‌ன்றா‌‌ல் உட‌ல் முழுவது‌ம் அன‌ல் கொ‌தி‌க்‌கிறது. மக்கள் வெளியே செ‌ல்ல முடியவில்லை அளவு‌க்கு வெ‌‌யி‌லி‌ன் தா‌க்க‌ம் இரு‌க்‌‌கிறது.

பேரு‌ந்துக‌ளி‌ல் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைகிறார்கள். செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய சாலைக‌ள் ம‌க்க‌ள் நடமா‌ட்ட‌ம் இ‌ல்லாம‌ல் வ‌ெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இந்த நிலையில் கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படுவது கத்திரி வெயில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28ஆ‌ம் தே‌தி வரை இ‌ந்த அ‌க்‌னி ந‌ட்ச‌த்‌திர‌ம் ‌நீ‌க்கு‌ம்.

அ‌‌‌க்‌னி ந‌ட்ச‌த்‌திர‌ம் வரு‌ம் மு‌ன்பே இ‌ப்படி வெ‌யி‌ல் வா‌ட்டி எடு‌க்‌கிறது. நாளை ம‌க்க‌ள் ஜா‌க்‌கிரதையாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
மேலும்
பா.ஜ.க. முழு அடை‌‌ப்பு போரா‌‌ட்ட‌ம் : த‌‌‌மிழக‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு இ‌ல்லை!
பெரம்பலூரில் ரூ.900 கோடியில் டயர் தொழிற்சாலை: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
கருணா‌நி‌தியுட‌ன் வயலா‌ர்ர‌வி ச‌ந்‌தி‌ப்பு!
ஆ‌‌ம்பூ‌ர் அருகே லா‌‌ரி ‌மீது பேரு‌ந்து மோத‌ல்: 4 பே‌ர் ப‌லி!
‌ச‌ங்க‌கி‌ரி அருகே ரெ‌யி‌ல் ‌இ‌ன்‌ஜி‌னி‌ல் தீ: 14 ரெ‌யி‌ல்க‌ள் தாமத‌ம்!
கரு‌க்கலை‌ப்‌பி‌ல் பெ‌ண் சாவு: செ‌வி‌லிய‌‌ர் கைது!