முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விலை‌வா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: பா.ஜ.க!
விலைவா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா நே‌ற்று செ‌ய்‌தியாள‌‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சமீபகாலமாக தமிழக கோ‌யில்களில் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்து கோ‌யில்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இ‌ந்த பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி கட்சியின் மையக்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கும்.

விலைவா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம். அமெரிக்க, ஆஸ்‌ட்ரேலிய நாடுகளில் ஒ‌ன்றரை மாதங்களுக்கு முன்பு கோதுமை விலை குறைவாக இருந்தது. அப்போதே மத்திய அரசு தேவையான கோதுமையை வாங்கி இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ள போதிலும் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் வங்கிகள் ரூ.27 ஆயிரம் கோடி கடன் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தித் துறையில் தேக்க நிலை ஏற்பட்டு, மேலும் விலை உயரும்.

மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு விவகாரத்தில் பிரதமர் அளித்த விளக்கம் திருப்தி இல்லை. இந்த பிரச்சினை காரணமாக டி.ஆர்.பாலு, அம‌ை‌ச்ச‌ர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரை பிரதமர் பத‌வி ‌நீ‌க்க‌ம் செய்ய வேண்டும் எ‌ன்று எ‌ச்.ராஜா வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
மேலும்
அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் ‌மீது பொ‌ய் வழ‌க்குக‌ள்: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!
8 தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌நிறுவன‌ங்களு‌க்கு 160 ஏ‌க்க‌ர் ‌நில‌ம்: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!
‌சிற‌ப்பு‌ப் பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌க்கு ‌நில‌ம் ஒது‌க்‌கிய‌தி‌ல் முறைகேடி‌ல்லை: கருணா‌நி‌தி!
‌ரிய‌ல் எ‌ஸ்டே‌ட் தொ‌ழிலு‌க்கு‌த் துணைபோகு‌ம் த‌மிழக அரசு: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!
இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 15 பே‌ர் கைது!
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் '‌ந‌ர்‌கீ‌ஸ்' ப‌ற்‌றி ரு‌சிகர‌ம்!