முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு!
நெ‌ல்லை‌யி‌ல் தடு‌ப்பூ‌சி போ‌ட்ட‌ப்ப‌‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 8 மாத குழ‌ந்தை இ‌ன்று ‌சி‌க‌ி‌ச்சை பல‌‌‌னி‌ன்‌றி இற‌ந்தது.

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு முத்துநாகு என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு கடந்த 23ஆ‌ம் தேதி மீனாட்சிபுரம் மாநகராட்சி மரு‌த்துவமனை‌‌யி‌ல் தடுப்பூசி போடப்பட்டது. ‌பி‌ன்ன‌ர் முத்து நாகுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் கொடு‌க்க‌ப்ப‌ட்ட கா‌ய்‌ச்ச‌ல் மா‌த்‌திரையை குழந்தை‌க்கு கொடு‌த்து‌ள்ளா‌‌ர் மு‌த்துமா‌ரி.

ஆனாலும் குழந்தை நாகுக்கு க‌ா‌ய்‌ச்ச‌ல் குணமாக‌வி‌ல்லை. தொடர்ந்து காய்ச்சல் இரு‌ந்து‌ள்ளது. நேற்று காய்ச்சல் அதிகமாகி குழந்தைக்கு வ‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

உடனடியாக குழ‌ந்தை மு‌த்துநாகுவை நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று குழந்தை முத்துநாகு பரிதாபமாக இறந்தது.

கட‌ந்த 23ஆ‌ம் தே‌தி ‌‌திரு‌வ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் தடு‌ப்பூ‌சி போ‌ட‌ப்ப‌ட்ட மூ‌ன்று குழ‌ந்தைக‌ள் இற‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
21 பேரு‌க்கு பணிநியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2.7 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்!
தாராபுரம் அருகே வே‌ன்-லா‌ரி மோத‌ல்: 5 பேர் ப‌லி!
மரு‌த்துவ‌ர்க‌ள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி : த‌மிழக அரசு!