முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ன்முறை பே‌ச்சு: திருமாவளவனுக்கு கைது உ‌த்தரவு!
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொல்.திருமாவளவனுக்கு சிதம்பரம் ‌நீ‌திம‌ன்ற‌ம் கைது உ‌த்தரவு பிறப்பித்து உள்ளது.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி பகுதியில் 1997ஆ‌ம் ஆ‌ண்டு தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அத்து மீறி பேசியதாகவும் அவ‌ர் மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு ப‌திவு செ‌ய்தன‌ர்.

இந்த வழக்கு சிதம்பரம் சா‌ர்பு ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நடந்து வந்தது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பிரகாசன் முன்னிலையில் நே‌ற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்.திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு கைது உ‌த்தரவு பிறப்பித்தா‌ர் ‌நீ‌திப‌தி.
மேலும்
நடு‌க்கட‌லி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்களை கட‌த்‌திய ‌சி‌றில‌‌ங்கா கடற்படை!
விண்வெளித் துறையின் மகத்தான உலக சாதனை: கருணாநிதி பாராட்டு!
நா‌ன் எ‌ந்த எ‌ஸ்‌டே‌ட்டையு‌ம் வா‌ங்க‌வி‌ல்லை: கருணா‌நி‌தி!
ஆ‌ந்‌திராவை நோ‌க்‌கி புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!
பாலாற்றில் ஆ‌ந்‌திர அரசு அணைகட்டினா‌ல் ச‌ட்ட‌ப்படி ச‌‌ந்‌தி‌ப்போ‌ம்: துரைமுருகன்!
செ‌ங்கோ‌ட்டைய‌ன் ‌மீது உ‌ரிமை ‌‌மீற‌ல் பிர‌ச்சனை!