முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரவாணிகள் படிக்க பாதுகாப்பான கல்வி வழங்கவேண்டும்
ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் :
அரவாணிகள் படிக்க பாதுகாப்பான கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட அரவாணி மந்தரா கூறினார்.

விழுப்புரத்தில் நடந்த கூவாகம் விழாவில் "மிஸ் கூவாகம்' போட்டியில் சேலத்தை சேர்ந்த மந்தரா தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது சொந்த ஊரான சேலம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மந்தரா கூறியது:

மிஸ் கூவாகம் போட்டியில் நான் தேர்வு செய்யப்பட்டதற்கு முழு காரணம் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்து பொது அறிவு வினாவிற்கு நான் அளித்த பதிலே ஆகும். நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் . அதன்பின் வகுப்பில் என்னை அனைவரும் கிண்டல் கேளி செய்ததால் படிப்பை தொடரமுடியவில்லை.

அரவாணிகளுக்கு படிப்பு விஷயத்தில் தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுமட்டுமின்றி எங்களுக்கு அரசு வேலையும் கொடுக்க அரசு முன்வரவேண்டும். வயது முதிர்ந்த அரவாணிகளுக்கு அரசு உதவி தொகை வழங்கவேண்டும். நாங்களும் மனித உணர்வுகளுக்கு உட்பட்டவர்கள் என பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மந்தரா கூறினார்.
மேலும்
விலைவாசி : கம்யூனிஸ்ட் கட்சிக‌ள் இணைந்து போராடும்
டி.ஆ‌ர்.பாலுவை அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: வைகோ!
டி.ஆ‌ர்.பாலு‌வி‌ன் அ‌ச்சுறு‌த்த‌ல்: இல.கணே‌ச‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!
‌விடை‌த்தா‌‌ள்கள் எரிந்து நாசம்: பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மாணவ‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு எழு‌த வே‌ண்டா‌ம்-த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு
குழ‌ந்தைக‌ள் மரண‌‌‌த்‌தி‌ற்கு தி.மு.க. அர‌சி‌ன் ‌‌நி‌ர்வாக ‌சீ‌ர்கேடே காரண‌‌ம்: ஜெயல‌லிதா!
சத்தி வனப்பகுதியில் பொதுமக்களை விரட்டும் யானை கூட்டம்