முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சத்தி வனப்பகுதியில் பொதுமக்களை விரட்டும் யானை கூட்டம்
ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்
elephants
webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைகள் பொதுமக்களை விரட்டும் ச‌ம்பவ‌ம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காட்டு விலங்குகளை துன்புறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

maan
webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை , மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகமாக இரு‌க்‌கி‌ன்றன.

கா‌ட்டி‌லத‌ற்போதகடு‌மவற‌ட்‌சி ‌நிலவுவதா‌ல், வனவிலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வனத்துறையினர் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் உள்ள வனக்குட்டையில் ஆழ்குழாய் மூலமாக தண்ணீர் நிரப்பி உள்ளனர்.

இதனால் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வனக்குட்டைக்கு மான்கள் மற்றும் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. காட்டுயானைகள் தண்ணீர் குடிப்பதை நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க வந்து விடுகின்றனர்.

வேடி‌க்கபா‌ர்‌க்வரு‌பவ‌ர்க‌‌ளி‌ல் ‌சில‌ரவனவிலங்குகளை தண்ணீர் குடிக்க ‌விடாம‌ல் தொந்தரவு செய்வதால் பல்வேறு சமயங்களில் இவர்களை யானை கூட்டங்கள் துரத்த தொடங்கிவிடுகிறது. இவர்களை வனத்துறையினர் விரட்டியடித்தாலும் நாள்தோறும் வேடி‌க்கபா‌ர்‌க்கு‌மகூ‌ட்ட‌ம் அதிகரித்தே வருகிறது.
மேலும்
ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி வெ‌ளிநட‌ப்பு!
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!
ஆசிரியர் பணியை பாக்கியமாக கருதுங்கள்: அப்துல் கலாம்!
6,302 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
வேலூ‌ர் ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாள் எரிந்து நாசம்!
4 குழந்தைகள் பலி : மத்திய மருத்துவ நிபுணர் குழு தமிழக‌த்‌தி‌ல் ‌விசாரணை!