முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தலைமை‌ச் செயலக‌ம் முன்பு மறியல் செ‌ய்த இ‌ந்‌திய கம்யூ. எம்.எல்.ஏ.க்கள் கைது!
விலைவா‌சி உய‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌‌ம் மு‌ன்பு இ‌ன்று சாலை ம‌றிய‌ல் செ‌ய்த இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்திகம்யூனிஸ்டகட்சியசேர்ந்உறுப்பினர்களவிலைவாசி உயர்வஅரசகட்டுப்படுத்தவறியதாகூறி அதகண்டிக்குமவகையிலசட்டசபையிலஇருந்தவெளிநடப்பசெய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறு‌ப்‌பின‌‌ர்க‌ள் சிவ புண்ணியம், குணசேகர், உலகநாதன், ராமசாமி, ராஜசேகரன், பத்மாவதி ஆகியோ‌ர் தலைமை செயலகம் எதிரே நடுசாலை‌யி‌ல் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அ‌ப்போது, விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் அவ‌ர்க‌ள் கோஷம் எழு‌ப்‌பின‌ர். இதையடுத்து அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து வேனி‌ல் அழைத்து செ‌ன்றன‌ர்.

அவ‌ர்களு‌க்கு ஆதரவாக சட்ட‌ப் பேரவை வளாகத்தில் நின்று மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர்க‌ள் சிறிது நேரம் கோஷம் எழுப்பி விட்டு பிறகு சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
மேலும்
ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீசுவரர் கோ‌யிலில் கொள்ளை!
மகா‌வீ‌ர் ஜெய‌ந்‌தி: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!
காவ‌ல்துறை `இன்பார்மர்' கொலை வழக்கு: நக்கீரன் கோபால் விடுதலை!
கா‌ங்க‌ி‌ர‌‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் த‌னி அமை‌ப்பு நட‌த்த‌க் கூடாது: ‌கிரு‌ஷ்ணசா‌மி!
ஆலடி அருணா கொலை வழக்‌கி‌ல் 2 பேரு‌க்கு தூ‌‌க்கு‌த் த‌ண்டனை: நெ‌ல்லை ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!
மாணவ‌ர்களை ஏமா‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர் பய‌ி‌ற்‌சி க‌‌ல்லூ‌ரிக‌ள் ‌‌மீது நடவடி‌க்கை: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!