முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காவ‌ல்துறை `இன்பார்மர்' கொலை வழக்கு: நக்கீரன் கோபால் விடுதலை!
சந்தனமர வீரப்பன் குறித்து காவ‌ல்துறை‌க்கு துப்புக்கொடுத்து வந்த, ராஜாமணி கொலை செய்யப்பட்ட வழக்கில், நக்கீரன் கோபால் உள்பட 6 பேரை விடுதலை செய்து கோபிசெ‌ட்டி பாளைய‌ம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சந்தனமர வீரப்பன் குறித்து காவ‌ல்துறை‌க்கு தகவல் கொடுத்து வந்தவர் ராஜாமணி. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு, சந்தன மர கடத்தல் வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சந்தனமர கடத்தல் வீரப்பன், அவனுடைய கூட்டாளிகள் சந்திரகவுடா, சேத்துக்குளி கோவிந்தன், மே.கே.ரங்கசாமி, மோகன், சரவணன், தமிழ்த்தீவிரவாதிகள் சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ், முத்துக்குமார், மணிகண்டன், நக்கீரன் கோபால் ஆகிய 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

வீரப்பன் கொடுத்த ஒரு துப்பாக்கி, 10 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை நக்கீரன் கோபால் வைத்திருந்ததாக காவ‌ல்துறை‌யின‌ர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திலும், ராஜாமணி கொலை வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்திலும் நடந்து வந்தன.

ராஜாமணி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்த, சந்தனகடத்தல் வீரப்பன், சந்திரகவுடா, சேத்துக்குளி கோவிந்தன், மே.கே.ரங்கசாமி, சரவணன் ஆகியோர் இறந்து விட்டனர். இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபால், தமிழ்தீவிரவாதிகள் சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ், முத்துக்குமார், மணிகண்டன், மோகன் ஆகியோ‌ர் மீது மட்டும் கோபி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து வந்தார். வழக்கு தொடர்பான சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை செய்து முடிந்ததைத்தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

நக்கீரன்கோபால் உள்பட 6 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்ப‌ளி‌த்தா‌ர்.
மேலும்
கா‌ங்க‌ி‌ர‌‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் த‌னி அமை‌ப்பு நட‌த்த‌க் கூடாது: ‌கிரு‌ஷ்ணசா‌மி!
ஆலடி அருணா கொலை வழக்‌கி‌ல் 2 பேரு‌க்கு தூ‌‌க்கு‌த் த‌ண்டனை: நெ‌ல்லை ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!
மாணவ‌ர்களை ஏமா‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர் பய‌ி‌ற்‌சி க‌‌ல்லூ‌ரிக‌ள் ‌‌மீது நடவடி‌க்கை: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!
சித்ராபவுர்ணமி: 19ஆ‌ம் தே‌தி திருவண்ணாமலைக்கு 840 சிறப்பு பேரு‌ந்துக‌ள்!
‌சி‌றில‌ங்காவு‌க்கு இரு‌‌‌ம்பு குழா‌ய்க‌ள் கட‌த்த முய‌ன்ற 6 பே‌ர் கைது!
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் 2,643 பணியிடங்கள் நிரப்பப்படும்: மு.க.ஸ்டாலின்!