முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சமையல் எண்ணெய் விலை குறைக்க வேண்டும் : தமிழக அரசு!
சமையல் எண்ணெய்களின் விலைகளை குறைக்குமாறு உற்பத்தியாளர்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது!

விலைகள் குறைக்கப்படாவிட்டால் அரசு சந்தைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு எச்சரித்துள்ளார்!

சமையல் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்து உற்பத்தியாளர்களுடனும், வியாபாரிகளுடனும் தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு, மொத்த விலைக்கும், மக்களுக்கு விற்கப்படும் சில்லரை விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றும், எனவே விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த எண்ணெய்களின் மீதான இறக்குமதி தீர்வையை நீக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்ட அமைச்சர் வேலு, இறக்குமதி தீர்வை 7.50 விழுக்காடாக குறைக்கப்பட்ட பிறகும், சந்தையில் விலை குறையவில்லை என்றும், எனவே சமையல் எண்ணெய் விலைகளை உற்பத்தியாளர்கள் குறைக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்பொழுது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அட்டைதாரர்களுக்கு விற்கப்படும் பாமாயில் எவ்வித விலையேற்றமும் இன்றி ரூபாய் நாற்பதுக்கே தொடர்ந்து விற்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுக்க உற்பத்தியாளர்களும், வியாரிகளும் ஒப்புக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும்
இ‌ந்த ஆ‌ண்டி‌ல் கட‌ல்‌நீரை குடி‌நீரா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌‌‌ம் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்!
செ‌ன்னை‌யி‌ல் 20,000 குடி‌யிரு‌ப்புக‌ள்: பெ‌ரியசா‌மி!
காட்டுப்பள்ளி‌யி‌ல் ரூ.3,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
தொலைபே‌சி ஒ‌ட்டு ‌‌: நீ‌திப‌தி ‌‌விசாரணை! முத‌ல்வ‌ர்
கூட்டத் தொடர் முடியும் வரை 2 அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌‌நீ‌க்க‌ம்!
மல்லிகை பூ விலை வரலாறு காணாத வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!