முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சத்தி அருகே மனைவி, மாமியார் வெட்டிகொலை!
வேலு‌ச்சா‌‌மி
ஈரோடு அருகே மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக்கொன்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது புன்செய்புளியம்பட்டி. இங்குள்ள கோவை ரோட்டில் வசிப்பவர் வெள்ளிங்கிரி (42). இவருடைய மனைவி சுமதி (39). இவர்களுக்கு கன்னிகாதேவி (11) திருமூர்த்தி (17) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுடன் சுமதியின் தாய் சின்னம்மாள் (75) வசித்து வருகிறார். நேற்று இரவு வெள்ளிங்கிரிக்கும் அவரது மனைவி சுமதிக்கும் தகராறு ஏற்பட்டது. பின் இரவு வழக்கம்போல் அனைவரும் தூ‌ங்கிவிட்டனர்.

அப்போது திடீரென எழுந்த வெள்ளிங்கிரி தன் மனைவி சுமதி மற்றும் மாமியார் சின்னம்மாள் ஆகியோரை அரிவாமனையால் வெட்டிக்கொன்றுவிட்டு தலைமறைவானார்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் புன்செய்புளியம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த சுமதி மற்றும் சின்னம்மாள் பிரேதங்களை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான வெள்ளிங்கிரியை தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
உலக நாடுகளுக்கு இந்தியா 2020ல் தலைமை தாங்கும்: பல்கலை கழக துணைவேந்தர் தகவல்!
ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் மீது பா.ஜ.க குற்றச்சா‌ற்று!
த‌மிழ‌‌ர்க‌ளி‌‌ன் கனவு ‌‌நிறைவே‌றி இரு‌ப்ப‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி: அர்ஜூன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்!
பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு: வைகோ!
கருணாநிதிக்கு ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் பாராட்டு தீர்மானம்!
சென்னை-பெங்களூருக்கு தொழில்வள சாலை: கருணாநிதி கோரிக்கை ஏ‌ற்பு!