முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் மீது பா.ஜ.க குற்றச்சா‌ற்று!
வேலு‌ச்சா‌மி
ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தவறான முடிவு எடுத்துவிட்டதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் கூறினார்.

ஈரோட்டில் பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில பார்வையாளர் வைரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் கவுரிசங்கர், மாநில சிறுபான்மையினர் அணி மாநில துணை தலைவர் அப்துல்ரகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உர தட்டுப்பாட்டை நீக்கி கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியங்கள் அனைத்தும் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி‌ன்ன‌ர் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், கர்நாடகா மாநிலம் பெங்களூரு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் போது தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்னையில் மத்தியில் தன் நிலையை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி தவறான முடிவு எடுத்துள்ளார்.

நாட்டில் இன்று பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. 70 சதவீதத்துக்கு மேற்பட்ட சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிலை நீடித்தால், வன்முறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏழை, பணக்காரன் இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டது.

ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் ஒரு விவசாயி வங்கியில் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. வங்கி கடன் தள்ளுபடி ஒரு கண்துடைப்புதான் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை வழங்க வேண்டும். ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்ற புள்ளிவிபரம் தவறானது. இது ஏமாற்றும் வித்தை எ‌ன்று ரமே‌‌ஷ் கூறினார்.
மேலும்
த‌மிழ‌‌ர்க‌ளி‌‌ன் கனவு ‌‌நிறைவே‌றி இரு‌ப்ப‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி: அர்ஜூன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்!
பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு: வைகோ!
கருணாநிதிக்கு ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் பாராட்டு தீர்மானம்!
சென்னை-பெங்களூருக்கு தொழில்வள சாலை: கருணாநிதி கோரிக்கை ஏ‌ற்பு!
சித்ரா பவுர்ணமி அ‌ன்று ‌‌‌‌வீடுக‌ளி‌ல் தீபம் ஏற்றுங்கள்: ஜெயலலிதா!
27 ‌விழு‌க்காடு இடஒது‌க்‌கீடு சமூக ‌நீ‌தி கொ‌ள்கை‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி: கருணா‌நி‌தி!