முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடையடைப்பு போராட்டம் தள்ளிவைப்பு: த.வெள்ளையன் அ‌றி‌வி‌ப்பு!
ஒகேனக்கல் பிரச்சினைக்காக ஏ‌ப்ர‌ல் 8ஆ‌ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு இருந்த கடையடைப்பு போராட்டம் முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்று த.வெள்ளையன் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலத்துக் கனவு, தமிழர்களின் உரிமை. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும், அதுவரை பொறுமை காப்போம் என்றும் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

பற்றி எரியும் தீயை இப்போதைக்கு அணைத்திடும் முயற்சியாக முதல்வரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கர்நாடக அரசு ஒகேனக்கல் திட்டத்துக்கு ஒப்புதல் தராவிட்டால், தமிழகம் தக்கபதிலடி கொடுக்கும் என்பதையும் முதல்வர் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.

எனவே முதல்வரின் அறைகூவலை ஏற்று, 8ஆ‌ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு இருந்த கடையடைப்புப் போராட்டத்தை தள்ளிவைப்பது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு எடுத்து உள்ளது.

கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்து இருக்கிறோம் என்பதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் அனைத்து தரப்பினருடன் இணைந்து எமது பேரவை எந்த நேரத்திலும் போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தம் கை‌விட‌ல்!
மழை தேச‌ம்: கடலூர், நாகப்பட்டினம், திருவாரூரில் ம‌த்‌திய குழு ஆ‌‌ய்வு!
சோ‌னியா ‌விழாவு‌க்கு து‌ப்பா‌க்‌கியு‌ட‌ன் வ‌ந்தவ‌ர் கைது!
சென்னையில் பா.ஜ.க அலுவலக‌‌ம் மு‌ற்றுகை : 100 பேர் கைது!
எ‌ன்.எ‌ல்‌.‌சி‌.யி‌ல் 1,620 தொ‌‌ழிலாள‌ர்க‌ள் கைது!
வேறு மா‌நில நடிகை‌க‌ள் வே‌ண்டா‌ம் எ‌ன்று ச‌த்யரா‌‌ஜ் சொ‌ல்வாரா? ராமகோபால‌ன் கே‌ள்‌வி!