முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்து‌க்கு மேலு‌ம் பு‌திய நீதிபதி நியமனம்!
சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு புதிய நீதிபதியாக வழ‌க்க‌றிஞ‌ர் எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசு‌த் தலைவ‌ர் அளித்துள்ளார்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌‌க்கு தற்போது 44 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 5 நீதிபதிகள் இடம் காலியாக உள்ளன. இதற்கிடையில், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் எம்.சத்தியநாராயணன், கண்ணன் ஆகியோரை நீதிபதியாக நியமிக்க சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பரிந்துரை செய்தது. சத்தியநாராயணனை புதிய நீதிபதியாக நியமிக்க தற்போது குடியரசு‌த் தலைவ‌ர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நீதித்துறை மரபுபடி ஆவணங்களை மத்திய அரசு, சென்னை உய‌ர் ‌‌நீ‌‌திம‌ன்ற‌ தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. எம்.சத்தியநாராயணன் அந்த ஆவணங்களில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்பாக இந்தியில் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்டதும், அந்த ஆவணங்கள் உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்னும், ஒரு வாரத்தில் குடியர‌சுத் தலைவ‌ர் நியமன உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியமன உத்தரவு வந்து சேர்ந்ததும் சத்திய நாராயணன் நீதிபதியாக பதவி ஏற்பார். தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

த‌ற்போது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 44 ‌நீ‌திப‌திக‌ள் உ‌ள்ளனன‌ர். பு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ச‌த்‌தியநாராயணனை சே‌ர்‌த்து 45 ஆக ‌நீ‌திப‌திக‌ள் எ‌ண்‌ணி‌க்கை உய‌ர்‌கிறது. இ‌தை‌த் தொட‌ர்‌ந்து 4 ‌நீ‌திப‌‌திக‌ள் இட‌ங்க‌ள் கா‌லியாக உ‌ள்ளன.
மேலும்
ந‌தி‌நீரை தே‌‌சியமயமா‌க்குவதே கா‌வி‌ரி ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு: சர‌த்குமா‌ர்!
கா‌வி‌ரி உருவாகு‌ம் குடகுமலையை ‌திரு‌ப்‌பி‌க் கே‌ட்போ‌ம்: ‌ஜி.கே.ம‌‌ணி!
25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்: வீரபாண்டி ஆறுமுகம்!
தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் : நடிகர்- நடிகைகள் ஆவேசம்!
ஒகேன‌க்க‌ல் : ர‌ஜி‌னி, ச‌த்யரா‌ஜ், ‌விஜயகா‌ந்‌த் ஆவேச‌ம்!
மழை சேத நிவாரணத்துக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி!