முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 5ஆ‌ம் தே‌தி பேரணி: பழ.நெடுமாறன்!
''கர்நாடக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சென்னையில் 5ஆ‌ம் தேதி பேரணி நடைபெறும்'' என்று பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னட வெறியர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. கர்நாடக தமிழர்களின் கலை-பண்பாடு மையமாக திகழும் பெங்களூர் தமிழ் சங்கம் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு சொந்தமான ஒகேனக்கல் மீது அத்துமீறி உரிமை கொண்டாட தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார்கள். கர்நாடகத்தில் உள்ள சகல கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளனர். காவிரி பிரச்சினை, வள்ளுவர் சிலை திறப்பு பிரச்சினை போன்றவற்றில் அடாவடித்தனமாக கன்னட வெறியர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய காவ‌ல் படையை அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்த வேண்டிய கடமை தமிழக முதலமைச்சருக்கு உண்டு. அதை அவர் செய்வார் என நம்புகிறேன்.

பெங்களூர் தமிழ்சங்கமும், தமிழர்களும் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பில் ஏப்ரல் 5ஆ‌ம் தேதி மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தப்படும்.

கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், அனைத்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் பழ.நெடுமாறன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
கன்னட வெறியர்களை அடக்க கோரி 4ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்!
தி.மு.க.வுடன் உறவு தொடரும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌டு!
கன்னட அமைப்பைக் கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதம்!
நிலம் கையகப்படுத்தல்: ராமதாஸ் புகாருக்கு ஆதாரம் இல்லை! ஐ.பெரியசாமி
க‌ர்நாடகா‌வி‌ல் வ‌ன்முறையாள‌ர்களை ஒடு‌க்க வே‌ண்டு‌‌ம்: இல.கணேச‌ன்!
மரு‌த்துவ‌க் க‌ல்வ‌ி வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் ம‌த்‌‌திய அரசு சாதனை : கிரு‌ஷ்ணசா‌மி பாரா‌ட்டு!