முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழ் வழியில் மருத்துவ படிப்பு கொண்டுவர நடவடிக்கை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
''தமிழ்வழியில் மருத்துவ படிப்பு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நட‌த்து‌ம் `குறிஞ்சி முத்தமிழ் மன்றம்' என்ற அமைப்‌பி‌ன் ஆண்டுவிழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பே‌சுகை‌யி‌ல், பொதுவாகவே மருத்துவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். இப்படிப்பட்ட நிலையில், அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கில் தனி அமைப்பை ஏற்படுத்தி அதை தொடர்ந்து நடத்தி வருகிறது பாராட்டுக்குரியது.

முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த வகையில் மருத்துவ துறையிலும் தமிழ் அரியணை ஏறும். மருத்துவ படிப்பை தமிழ்வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சென்னைக்கு அருகே அலமாதி என்ற கிராமத்தை தத்தெடுத்து மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஒரு கிராமத்தை மட்டுமல்ல ஏராளமான கிராமங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ப‌ன்‌‌னீ‌ர் செ‌ல்வ‌ம் கூ‌றினா‌ர்.
மேலும்
தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி பி.எட். படிப்பு தொடக்கம்!
தமிழகத்தில் இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம் தேதி வெளி‌யீடு: கோபாலசா‌மி!
தமிழக புதிய டி.ஜி.பி. கே.பி.ஜெயின்!
சத்திய மூர்த்தி நினைவு நாள்!
ரூ.63 கோடி‌யில் கொல்லிமலையில் புதிய நீர்மின் திட்டம்: ஆற்காடு வீராசாமி!
சொ‌த்து வ‌ரி உ‌த்தரவை ‌திரு‌ம்ப பெற வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!