முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற நீதிபதி எ‌ண்‌ணி‌க்கை 44 ஆனது!
சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.சுப்பையாவு‌க்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இ‌வருட‌ன் சே‌ர்‌த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 44 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்.சுப்பையாவை, குடியரசு‌த் தலைவ‌ர் ‌சமீபத்தில் ‌‌நிய‌மி‌த்து உ‌த்தரவு பிறப்பித்தார். இவரது பதவி ஏற்பு விழா சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் உள்ள அரங்கத்தில் நே‌ற்று நடைபெற்றது.

அவரு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இத‌ன் மூல‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 நீதிபதிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

பு‌திய ‌நீ‌திப‌தி ஆ‌ர்.சு‌ப்பையாவை அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி, வழ‌க்க‌றிஞ‌ர்கள் சங்கத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பார் அசோசியேஷன் தலைவர் டி.வி.ராமானுஜன், பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன், பெண் வழ‌க்க‌றிஞ‌‌‌ர்கள் சங்க தலைவர் கே.சாந்தகுமாரி, லா அசோசியேஷன் சார்பில் செல்வராஜ் ஆகியோர் பாராட்டி பேசினர்.
மேலும்
சம்பள உயர்வு சிபாரிசு ஏமாற்றம்: மத்திய அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்!
மேலும் ஒரு காற்றழுத்த மண்டலம்! கனமழை தொடரும்: வா‌னிலை
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரயில் விட கோரிக்கை!
பொ‌ன்முடி‌யிட‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி நல‌ம் ‌‌விசா‌ரி‌ப்பு!
க‌‌ச்ச‌த் ‌தீவை ‌மீ‌ட்க ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுக முடிவு: இல.கணேச‌ன்!
இருமல் மருந்துகளுக்கு தடை- மருத்துவர்கள் கோரிக்கை!