முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழ்நாட்டில் மேலும் 5 ஜவுளிப் பூங்கா: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
''த‌மிழக‌த்‌தி‌ல் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்'' என்று மத்திய ஜவுளித் துறை இணை அமை‌ச்ச‌ரஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ஏற்றுமதி அலுவலகம், க‌‌‌‌ம்‌ப்யூட்டர் வடிவமைப்பு மைய‌த்தமத்திய ஜவுளித்துறை இணை அமை‌ச்ச‌ரஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நே‌ற்று ‌‌திற‌ந்தவை‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ரஅமை‌ச்ச‌ர் ஈ.‌ி.ே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌னசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌‌யி‌ல், த‌ற்போதநாடு முழுவதும் மேலும் 30 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். எந்தெந்த இடத்தில் ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பது என்று முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு ஜவுளிப் பூங்காவும் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்படும்.

கைத்தறி, விசைத்தறி தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய வசதியாக நாடு முழுவதும் 6 ஒருங்கிணைப்பு மையங்கள் தலா ரூ.70 கோடியில் அமைக்கப்பட உள்ளன. ஈரோட்டில் விசைத்தறி தயாரிப்புகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுகிறது.

நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்ய இந்த மையங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும். உற்பத்தி பிரிவும் ஒருங்கிணைப்பு மையங்களில் செயல்படும் எ‌ன்றஅமை‌ச்ச‌ரஇள‌ங்கோவ‌னகூ‌றினா‌ர்.
மேலும்
வெ‌ள்ள ‌நிவாரண‌த்து‌‌க்கு கூடுத‌ல் ‌நி‌தி ஒது‌க்க தயா‌ர்: மு‌.க‌.‌ஸ்டா‌லி‌ன்!
ந‌ல வா‌ரிய‌‌ங்க‌‌ளி‌ன் மொ‌த்த ப‌ணியு‌ம் வரு‌வா‌ய் ‌துறை‌யிட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்பட‌வி‌‌ல்லை: கருணாநிதி!
நாளை மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வு துவ‌க்க‌ம்!
மழை, வெள்ளம் : அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
திம்பம் மலையில் வரலாறு காணாத மழை! திடீரென தோன்றிய அருவி!
சிறிலங்காவிற்கு ஆயுதம் : சென்னையில் ஆர்ப்பாட்டம்!