முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழக அரசின் வரி இல்லாத நிதிநிலை அறிக்கை!
பெரும்பாலாபொருட்களுக்கவரி விலக்கும், வரி விதிப்புமஅளித்து, இந்தாண்டவரி இல்லாநிதிநிலஅறிக்கையசட்டப்பேரவையிலநிதி அமைச்சர் க.அ‌ன்பழகனதாக்கலசெய்துள்ளார்.

அரசு சார்பில் நடத்தப்பட்ட வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மதிப்புக்கூட்டு வரி விதிப்பில் பல்வேறசலுகைகளதமிழஅரசஅறிவித்துள்ளது. இந்வரிவிலக்கு, வரிக்குறைப்பு சலுகைகள் 1.4.2008-லிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள வரிவிலக்கு சலுகைகள்:

காகித உறை, குறிப்பிட்ட விற்றுமுதல் வரை மஞ்சள், மிளகாய், தனியா வகைகள், அதே விற்றுமுதல் நிபந்தனையுடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, தேங்காய் துருவல், தேங்காய்ப் பால், தேங்காய்ப் பால் பொடி, அடைக்கப்பட்ட இளநீர், வெளிமாநிலத்திற்கு விற்கப்படும் வெல்லம், காட்டாமணக்கு விதை, எண்ணெய், இரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ற்கு வ‌ரி‌வில‌க்கு.

பெரும்பாலான தாவர எண்ணெய்களுக்கும், அனைத்து வகையான சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்கும் விற்றுமுதல் நிபந்தனையுடன் வரிவிலக்கு.

சோயா எண்ணெய்க்கு நிபந்தனையுடன் வரிவிலக்கு.

திருமணத்தின் போது பெண்கள் அணியும் தங்கத்திலான தாலிக்கு 8 கிராம் வரை வரிவிலக்கு உள்ளது.

இஸ்லாமிய, கிறித்தவ மதத்தினர் மங்கல நாணாக பயன்படுத்துகின்ற கருகமணி, சிலுவை போன்றவற்றிற்கும், தற்பொழுது நடைமுறையிலுள்ள 8 கிராம் வரை வரிவிலக்கஉள்ளது.

இந்எடை வரம்பஏதுமின்றி முழவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தை ஊக்குவிக்குமவகையில், அனைத்து சித்த மருந்துகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனையுடன் கூடிய வரிவிலக்குப் பொருட்களான சமையல் எண்ணெய், பருப்பு, பயறு வகைகள், மஞ்சள், மிளகாய், தனியா ஆகிய பொருட்களை உணவகங்கள் கொள்முதல் செய்யும்போது, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் கொள்முதல் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க, இப்பொருட்களுக்கு கொள்முதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1 | 2  >>  
மேலும்
கோவை‌யி‌ல் மா‌‌ர்‌ச் 29‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ட்‌சி‌யி‌‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநாடு!
த‌மிழக காவ‌ல்துறை ந‌வீனமயமா‌கிறது!
‌நி‌தி‌நிலை வலுவாக உ‌ள்ளது: ஞானதே‌சிக‌ன்!
இர‌யி‌ல் தட‌‌ம் புர‌ண்ட ‌விப‌த்து எ‌திரொ‌லி: இர‌யி‌ல்க‌ள் ர‌த்து!
உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு பு‌திய ‌‌நீ‌திப‌தி ‌‌நியமன‌ம்: 24ஆ‌ம் தே‌தி பதவி ஏற்பு!
பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!