தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அன்பழகன் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சம் வருமாறு:
* பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு.
* தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.
* சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்
* தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.
* சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.
* பன், ரஸ்க், சோயா எண்ணெண், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு - மற்றும் பல பொருட் களுக்கு வரி குறைப்பு
* பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 விழுக்காட்டை அரசே வழங்கும்.
* கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.
* கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி ரூ.4 ஆகக் குறைப்பு.
* சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்
* திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்
* புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்
* புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவாய் வட்டங்கள்
* திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள்- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.
* வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்
* 3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்
* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் - ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு.
* ரூ.6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றிதழ் தேவையில்லை.
* சிறு வணிகம் செய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50 கோடி கடன்.
* கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் அறவே ரத்து.
* ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூ.5 கோடி அறவே தள்ளுபடி.
* கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து - ஏற்கனவே உள்ள நிலுவை ரூ.16 கோடி முழுவதும் தள்ளுபடி
* பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், உயர் வருவாய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.
* 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து
|