முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆறுமுகசாமிக்கு மாத‌ந்தோறு‌ம் நிதியுதவி: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!
webdunia photoFILE
''ஓதுவார் ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவியும், ரூ.15 மருத்துவப்படியும் வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‌சிதம்பரம் கோ‌யிலில் தேவார பாடல்களை பாடுவதற்கு நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் ஓதுவார் ஆறுமுகசாமி. அவர் தேவார திருவாசகப் பாடல்களை இசையோடு பாடுவதில் வல்லவராகவும், தமிழறிஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

முதுமையிலும் உணர்வு குன்றாது தமிழ் மொழி பண்பாட்டு மரபுகளை பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும் கொண்டுள்ள மன உறுதியை போற்றிப்பாராட்டும் வகையில் அவருக்கு தமிழறிஞர் நிதியுதவி திட்டத்தின் கீழ் இந்த மாதம் 1ஆ‌மதேதி முதல் அவரது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் நிதியுதவியும், பதினைந்து ரூபாய் மருத்துவப்படியும் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
சத்தியில் வழி தவறிய யானைக்குட்டி: வனத்துறையினர் மீட்டனர்!
கோ‌யி‌ல் காவ‌லா‌ளியை தா‌க்‌கி நகை, பண‌ம் கொ‌ள்ளை!
போ‌லி சா‌ன்‌றி‌த‌ழ்: ஹ‌ரியானா வா‌லிப‌ர்க‌ள் 4 பே‌ர் கைது!
செ‌ன்னை‌யி‌ல் ரூ.2000 கோடி‌யி‌ல் சூ‌ரிய ச‌‌க்‌தி ‌மி‌ன்சார‌ம் தயா‌ரி‌‌‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ம்!
ஜெயல‌லிதா ‌மீதான சொ‌த்து வ‌ரி வழ‌க்கு ஏ‌ப்ர‌ல் 17ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளி வை‌ப்பு!
‌‌சாலை ‌விப‌த்‌‌தி‌ல் ப‌லியான 8 பே‌ர் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.10.40 ‌ல‌‌ட்ச‌ம் நி‌தியுத‌வி: முத‌‌‌ல்வ‌ர் உ‌த்தரவு!