முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
18ஆம் தேதி வரை மழை நீடிக்கும்!
தற்போது சென்னை உட்பட தமிழகத்தில் பெய்து வரும் மழை வரும் 18ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மழை பற்றிய ஆய்வு செய்து வரும் மழை ராஜ் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் என்பவர் மார்ச் மாதம் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்திருந்தார்.

ஆனால் இந்த கணிப்பின்படி, இரண்டு நாட்கள் தாமதமாக தமிழகத்தில் பெய்ய துவங்கிய மழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் மேகங்களை ஆய்வு செய்து தற்போதைய வானிலை கணிப்பின்படி மார்ச் மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை வரையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போது பெய்து வரும் மழையானது 18ஆம் தேதி வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் தனது கணிப்பின்படி மார்ச் மாதம் 27ஆம் தேதி மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்திலும் மழை நீடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும்
மாண‌வி சரிகாஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!
‌மா‌நில‌ங்களவை தே‌ர்த‌ல்: கா‌ங். வே‌ட்பாள‌ர்க‌ள் நாளை மனு‌‌த் தா‌க்க‌ல்!
மா‌நில‌ங்களவை தே‌ர்த‌ல்: க‌ம்யூ. வே‌ட்பாள‌ர் வே‌ட்பு மனுதா‌க்க‌ல்!
பா‌ல் ‌விலை உய‌ர்வு: ஜெயல‌லிதா சொ‌ல்வது பொ‌ய்- கருணா‌நி‌தி!
2,025 பே‌ர் ‌விரை‌வி‌ல் ப‌ணி ‌நிர‌ந்தரம‌்: மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌‌ம்!
நதிக‌ள் இணை‌ப்பு கோரி பிரதமருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை