முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிசிசிஐ ‌மீது டால்மியா வழக்கு!
தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக, பிசிசிஐ ‌மீது ஜக்மோகன் டா‌ல்மியா கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்!

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தற்போது இப்பிரச்சனை குறித்து எதுவும் கூறமுடியாது என மறுத்துவிட்டார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கொல்கட்டா உயர்நீதிமன்றத்திடம் அவகாசம் கேட்டுள்ளதாக மட்டும் தெரிவித்தார்.

பிசிசிஐ முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியா, 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான், இந்தியா, இலங்கை குழுவான பில்காம் வங்கிக்கணக்கில் இருந்த சுமார் 2 கோடியே 90 லட்சம் ரூபாயை முறைகேடாக செலவிட்டதாக பொருளாதார குற்றங்களுக்கான (மும்பை) பிரிவு நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட டால்மியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
அடுத்த கூட்டம் வரை கவாஸ்கர் நீடிப்பார்
டால்மியா கைது! பிணையில் விடப்பட்டார்!
ஆஸி.தொடரை புறக்கணிப்போம்-பாக் அச்சுறுத்தல்
மன்ஜித் கெளர் பயிற்சிபெற அமெரிக்க செல்கிறார்!
சிறந்த உள் நாட்டு வீரராக யூசுஃப் பத்தான் தேர்வு
தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்க அ‌ணி செ‌ன்னை வ‌ருகை!