முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டால்மியா கைது! பிணையில் விடப்பட்டார்!
நிதி முறைகேடுகள் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா இன்று கைது செய்யப்பட்டு பிறகு உடனடியாக பிணையில் விடப்பட்டார்.

மும்பை காவல்துறை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் தன் வழக்கறிஞர்களுடன் காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியா முன் ஆஜரானார் டால்மியா.

ஆனால் டால்மியா ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கிற்காக முன் ஜாமின் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

1996ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நடத்திய உலக் கோப்பை போட்டிகளின்போது ‌கிடை‌த்த ரூ.2.9 கோடி தொகையை முறைகேடு செய்திருப்பதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்ற விசாரணைப் பிரிவு டால்மியா மீது குற்றம்சாட்டியது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 16ஆம் தேதி மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தது.
மேலும்
ஆஸி.தொடரை புறக்கணிப்போம்-பாக் அச்சுறுத்தல்
மன்ஜித் கெளர் பயிற்சிபெற அமெரிக்க செல்கிறார்!
சிறந்த உள் நாட்டு வீரராக யூசுஃப் பத்தான் தேர்வு
தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்க அ‌ணி செ‌ன்னை வ‌ருகை!
தோனியை பரிந்துரை செய்தது சச்சின் - பவார்
மொரோசேவிச்சை வீழ்த்தினார் ஆனந்த்