முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸி.தொடரை புறக்கணிப்போம்-பாக் அச்சுறுத்தல்
பாகிஸ்தானில் ஆஸ்ட்ரேலியா விளையாட மறுத்தால், 2009ஆம் ஆண்டு தங்களது ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அச்சுறுத்தியுள்ளது.

தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த ஆஸ்ட்ரேலியா பாதுகாப்பு காரணங்கள் கருதி பயணத்தை தள்ளி வைத்துள்ளது. ஆனால் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தையும் ஆஸ்ட்ரேலியா விளையாட மறுத்தால் 2009 ஆம் ஆண்டு தங்களது ஆஸ்ட்ரேலிய பயணத்தை ரத்து செய்வோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணியின் பாக் பயணத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றலாம் என்று பாகிஸ்தான் கி‌ரிக்கெட் வாரியம் இந்த தொடரை 7.4 மில்லியன் டாலர்களுக்கு காப்பீடு செய்துள்ளது. இதனா‌ல் பாகிஸ்தானிற்கு நிதி இழப்புகள் ஏற்படாது என்ற நிலை இருந்தது.

ஆனால் தற்போது ஒத்திவைக்கப்பட்ட தொடருக்கு காப்பீட்டுத் தொகை உரிமை கோர முடியாது என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது. தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் காப்பீட்டு பாதுகாப்பை நீட்டிக்க மிகப்பெரிய தொகையை பாகிஸ்தான் வாரியம் ‌பி‌ரீமியமாக செலுத்த வேண்டும் என்று பாக். வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்றன.

இந்த பிரிமியம் தொகை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானிற்கு வ‌ந்து ஆஸ்ட்ரேலியா விளையாட மறுத்தால், தங்களது ஆஸ்ட்ரேலிய பயணத்தையும் ரத்து செய்வோம் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.
மேலும்
மன்ஜித் கெளர் பயிற்சிபெற அமெரிக்க செல்கிறார்!
சிறந்த உள் நாட்டு வீரராக யூசுஃப் பத்தான் தேர்வு
தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்க அ‌ணி செ‌ன்னை வ‌ருகை!
தோனியை பரிந்துரை செய்தது சச்சின் - பவார்
மொரோசேவிச்சை வீழ்த்தினார் ஆனந்த்
பிரசாத், ராபின்சிங் தொடர்கின்றனர்